அவர்கள் இறைவனின் அவதாரங்கள் இணைவோம் கைக்கோர்த்தே

சுழலுகின்ற வாழ்க்கையின்
நம் சுழற்ச்சியின் மாற்றங்கள்
உதவியென்னும் வார்த்தையும்
உதவியென்றே கேட்கிறது
ஏட்டு சுரைக்காய்போலின்று 
கூட்டுக்கு உதவாமல்போனது
காணாமல்போன கருணையும்
காட்சியாய்யிங்கு உருப்பெற
கண்ணீரோடு கவிதையாய்,,,
தனக்கென்றந்த தன்னலம்
மறந்து நமக்கென்றொரு
பொதுநலம் வளர்த்து
உதவிக்கு உயிர்கொடுத்து
மனிதத்தை வாழச்செய்து
மாண்போடு வையத்தை
சுழற்றிச்செல்வே சிறுதுளி
பெரும்வெள்ளம் சிறப்பாக
கையாண்டால் தாகம் தீர்க்கும்
குடிநீராக்கும் குழந்தைக்கு
இங்கு சொல்லிக்கொடுத்தாரு
எண்ணிப்பார்க்க வேண்டாமா
காலுக்கு மீறிய காலணியும்
வயதுக்கு மீறிய கரிசனமும்
கண்களை குளமாக்குகிறது
கள்ளத்தனமா உள்ளங்களை
தன் பிஞ்சு கரங்கலாளிவன்
வெளுத்திட முயலுகின்றான்
வேடிக்கை பார்ப்பதைவிடுத்து
வாழ்க்கை சொல்லும் பாடம்
கொஞ்சம் வாழ்ந்து பார்ப்போம்,,,
முயன்றால் வெற்றி நிச்சயம்🤝
🙏


No comments