VOICE FROM HEART

இது திறமைகளை வளர்ப்பதற்காக மாணவர்களிடமிருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அதே மாணவர்களேசமூக சேவையில் கால்களைப் பதித்து பல வகையான சேவைகளை செய்துக் கொண்டிருக்கின்றனர். தன்னார்வலர்களும் எங்களுடன் இணைந்து செயல்புரிகின்றனர்.                 VFH-ல் 200க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் உள்ளனர். புதுமையான விஷயங்களை யோசித்து அவைகளை வேறுபட்ட முறையில் செயல்படுத்துகின்றோம். VFH தற்சமயம் நான்கு இடங்களில் செயல்படுகிறது.

This Foundation is started in the motive to develop skills by students. Then it motivated students to follow social network and to do a variety and enormous of services. Day by day volunteers joined with us to perform social work. Right now, VFH has more than 200 volunteers, with an enormous motive of thinking innovative things and processing it in a different method. Currently, VFH operates in four places





நமது சேவைகள்
OUR SERVICES


VFH துவக்கம்

15.06.2018 அன்று Jest Angels. இராமநாதபுரத்திலுள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை காண சென்றோம். அவர்களுக்கு உணவு அளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினோம். அங்கே இருந்துதான் நம் சேவை தொடங்கியது.

VFH BEGINNING

On 15.06.2018, We went to see the mentally retarded students. We fed them and made them happy. That's where our service began.





மெரினா கடற்கரையில் VFH

சரியான உணவும்கல்வியும் இல்லாமல் மெரினா கடற்கரையில்
வசிப்பவர்கள் இருக்கிறார்கள் என அறிந்தவுடன் அவர்களுக்கு உணவு
அளித்தோம். கல்வியை அளிக்க எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகின்றோம்.

VFH IN MARINA BEACH

We fed them when we knew that the people live without proper food and education in marina beach. We are making efforts to provide education.






சாலையோர மக்களுக்காக நாம்

நாம் தினமும் சென்று வருகின்ற சாலையில் பல மக்கள் உணவும்,
உடையும் இல்லாமல் இருக்கின்றனர். இதனைக்கண்ட நம் மாணவர்கள் அவர்களுக்கு உணவும்உடையும் அளித்து அவர்கள் முகத்தை மகிழ்ச்சியாக்கினர்.

WE FOR ROADSIDE PEOPLE

On the road that we go every day, many people live without food and clothes. our volunteer's give them food and clothes and made them happy.





எங்களுக்கு தேவை குழந்தைகளின் சிரிப்பு

நம் Coimbatore VFH மாணவர்கள் தங்களுடைய  சேவைகளை
குழந்தைகளிடமிருந்து துவங்கினர். Kings Kids Home-ல் உள்ள குழந்தைகளுக்கு உணவு அளித்து அவர்களுடன் விளையாடி மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.

ALL WE NEED IS CHILDREN'S LAUGHTER

Our Coimbatore VFH team started their services from children's. At Kings Kids Home they fed children's by providing food and played with them happily...






LOVERS DAY - இப்படியும் கொண்டாடலாம்?

காதலர் தினத்தில் நம் மாணவர்கள் தங்கள் காதலை வேறு விதமாக
வெளிக்காட்டினார்கள். காதலர் தின பரிசாக மனவளர்ச்சி குன்றிய
மாணவர்களுக்கும் இறைவனின் குழந்தைகளுக்கும் Coloring Books,
Sketches இவைகளை அளித்து அவர்களது கலைகளை வளர்ப்பதற்கு
உதவி புரிந்தோம். மேலும் அவர்களுக்கு  உண்மையான காதல் என்றால் என்ன?  என்பதை பற்றி அந்த மாணவர்களுக்கு விளக்கி உண்மையான காதல் என்பது ஆசிரியருக்கும்பெற்றோர்க்கும் காட்டும் அன்பு என்று நல்வழிப்படுத்தினோம்.

LOVER'S DAY - CAN BE CELEBRATED LIKE THIS TOO!!

Our VFH student's team showed and expressed their love on this Valentine's Day on a different way and differently. As a part Valentine's Day gift, we gifted Coloring Books and Sketches for mentally retarded student's as well as for children's of God. In spite of that, we taught them, what does true love mean. We explained to them that true love is what we show to teacher's and parent's and we have been blessed with lots of love.





தமிழையும் தமிழனின் மரபையும் வளர்ப்போம்

தமிழ் புத்தாண்டு அன்று ரயில்நிலையத்தில் உள்ளவர்களுக்கும்
சாலையோரத்தில் உள்ளவர்களுக்கும் தமிழ்வழி உணவாக கம்மங் கூழ் போன்ற உணவுகளை அளித்து பசியை ஆற்றினோம்.

TAMIL AND THE LEGACY OF TAMIL IMPLANT

On the occasion of Tamil New Year in order to follow the tradition and hereditary customs we provided healthy traditional foods like  Kammang kul(கம்மங் கூழ்) as a food source for the roadside people and those who are working in and around  railway station and made them to be satisfied as much as we could .







உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினத்தில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் வண்ணமாக ரயில் நிலையங்களில் வெயில் பாராது வேலை செய்வோர்க்கும் தன் வயதான காலத்திலும் வேலை செய்வோர்க்கும் சேலைவேட்டிசட்டை அளித்து கௌரவப்படுத்தினோம்.

LABOUR'S DAY

On Labour's day we honoured the workers who were working in railway stations even on the spot of hot sun and those who were working even in their old age with youthful energy by giving them saree's and shirt's.







முதலாம் ஆண்டு விழா

VFH தொடங்கி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் முதலாம் ஆண்டு விழாவை  ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களுடன் ஆடி பாடி விளையாடி  கொண்டாடினோம்

FIRST YEAR ANNIVERSARY

On behalf of first year anniversary of VFH by it's inception the ceremony fed the orphaned children and played with them and enjoyed by singing and playing with lots of love





வாரம் தோறும்

ஒவ்வொரு வாரமும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களிடம் சென்று
அவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் வண்ணம் செயல்படுகின்றோம்.

WEEKLY EVENTS

Weekly we go to mentally retarded students and we put our efforts by which means we can improve their lives by co-ordinating love with them.







கஜா புயலில் நம் மாணவர்கள்

கஜா புயலில் மக்கள் தவிக்கிறார்கள் என அறிந்தவுடன் நம் VFH மாணவர்கள் வீடுகள்தோறும் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கினார்கள்.

OUR STUDENTS IN GAJA STORM

When we came to know that people were affected in the gaja Storm, our VFH team gathered items from home and helped the victims.







சமூக வலைதளங்களில் நாம்

குழந்தைகளின் திறமைகளை சமூக வலைதளங்களில் வெளிகொணர்ந்தும் Motivational வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் Upload செய்து மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றோம்.

WE IN SOCIAL MEDIA'S

Exploring children's talents and making it to bloom with an outcome of an inception on social networks and uploading those motivational videos to motivate students.









கனவு மெய்ப்பட வேண்டும்

ஒரு உயிர் புலியிடம்  மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வையாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லை.ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள். அதன்பிறகுதான் அந்தப் புலிஅவனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு  சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம். காரணம் அறிவின்மைஎன்ன செய்வது என்கிற அறிவின்மை. மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர்தன் சட்டையைக் கழற்றிஅதில் நெருப்பு வைத்துஅதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்
(a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் என்ன பயன்?  ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுதுவேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்,சிங்கமாக இருக்கலாம்,அல்லது யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் என்ன பயன்அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் தூள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?



எங்களது திட்டம் என்னவென்றால் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி மாதத்திற்கு ஒரு சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று தென்னாப்பிரிக்காவிலும்ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுப்பது
மற்றவர்களை மதிப்பது எப்படி?.
மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?
சாலை விதிகள் என்ன?
ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?
அடிப்படைச் சட்டங்கள் என்ன?
நமக்கான உரிமைகள் என்ன?
காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?
விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?
மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?
நோய்களை எவ்வாறு கண்டறிவது?
எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?
கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?
மற்றவர்களை நேசிப்பது எப்படி?
நேர்மையாய் இருப்பது எப்படி?
சில பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமே கற்றுத் தருகின்றனர்.. விளையாட்டு,ஓவியம் போன்றவற்றை கற்றுத்தருவதில்லைஇதனால் அவர்களால் எந்த ஒரு போட்டியிலும் பங்குக்கொள்ள முடியவில்லை..அனைத்தும் நாங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்புதுடன் அவர்களிடம் உள்ள தனித்திறமையைக் கண்டுப்பிடித்து அவர்களை பல போட்டிகளில் கலந்து வெற்றிப் பெற நாம் உதவி செய்ய வேண்டும்.. இவை அனைத்தையும் கற்றுக் கொடுப்பதே எங்கள் திட்டம் அன்றைய தினம் மாணவர்கள் புத்தகப் பை கொண்டு வர தேவையில்லை . மாணவர்களை அனாதை இல்லம் ,மனவளர்ச்சி குன்றியோர்கான இல்லம் முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்வதும் எங்கள் திட்டம் ஏனென்றால் அனாதை இல்லத்திற்கு அழைத்து செல்வதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் பிள்ளை வரம் கேட்டு கோவில் கோவிலாக ஏறி இறங்காமல் பெற்றோர் வரம் கேட்டு அனாதை இல்லத்தில் காத்திருக்கும் பிள்ளைகளின் முகத்தை நினைத்து பார்ப்பார்கள் . மனவளர்ச்சி குன்றியோர்கான இல்லத்திற்கு அழைத்து செல்வதன் மூலம் மாணவர்கள் மனவளர்ச்சி குன்றியோர்களை தவறாக புரிந்து கொள்ளும் எண்ணத்தை கைவிடுவார்கள் முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்வதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதை நிறுத்துவார்கள். மேலும் மாணவர்களை ரயில் நிலையம் போலிஸ் ஸ்டேசன் தீயணைப்பு நிலையம் போன்றவற்றிற்கு அழைத்து சென்று அங்குள்ளவற்றை அறிந்து கொள்ள வைப்பதுமேலும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் பேருந்து மேற்கூரையில் ஏறி கோஷங்களை எழுப்பி பேருந்திலிருந்து விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் நாம் பார்த்திருப்போம். இந்நிலைமை ஒழிய மாணவர்களுக்கு பஸ் டே  என்றால் பயணிக்கும் பேருந்துகளை சுத்தம் செய்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்து கொண்டாடுவதே உண்மையான பஸ் டே என கூறியதோடு மட்டுமல்லாமல் உண்மையான பஸ் டே கொண்டாட வைப்பது எங்கள் திட்டம். இது மாணவர்கள் எதிர்காலத்தில் தவறான வழியில் பஸ் டே கொண்டாடாமல் உண்மையான பஸ் டே கொண்டாட வழிவகுக்கும். எங்கள் திட்டம் பற்றி உங்களது கருத்துக்களை vfhfoundation@gmail.com என்ற முகவரிக்கோ 9080200260 என்ற வாட்சஅப்  எண்ணிற்கோ அனுப்பலாம்.



No comments